2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒருவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 19 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐ.நேசமணி, ற.றஜீவன்

வடமராட்சி வல்லிபுரக்குறிச்சி சிங்கை நகரில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்றிரவு துரத்தித் துரத்தி வாளால் வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படும் அவருடைய மச்சான் முறையான ஒருவரை இன்று (19) காலை கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் இன்று (19) தெரிவித்தனர்.
அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினார்கள்.

நேற்று (18) இரவு இடம்பெற்ற இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளியும் இரு பெண் பிள்ளைகளின் தந்தையுமான தில்லையம்பலம் விமலநாதன் (வயது-41) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார்.

விமலநாதனின் சகோதரியின் கணவன், கணவனின் சகோதரர்கள் ஆகியோர் நேற்று (18) காலை முதல் விமலநாதனுடன் முரண்பட்டிருந்தனர்.
தொடர்ந்து நேற்று (18) இரவு விமலநாதன் சீவல் தொழில் முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, அவரை வழிமறித்த மச்சான்மார் இருவரும் அவரைத் துரத்தி துரத்தி வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதனால் சம்பவ இடத்திலேயே விமலநாதன் பலியாகியதுடன், வாள்வெட்டினை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில் விமலநாதனின் சகோதரியின் கணவனின் தம்பியாரை இன்று (19) காலை பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், இதனுடன் தொடர்புபட்ட விமலநாதனின் சகோதரியின் கணவனைத் தேடி வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மச்சான்கள் இருவரின் வாள்வெட்டிற்கு இலக்காகி கடந்த 3 வருடங்களிற்கு முன்னரும் விமலநாதன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும் பொலிஸார் மேலும் கூறினார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .