2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உண்மை விரைவில் வெளிவரும் :சி.வி

Kanagaraj   / 2014 மார்ச் 19 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

13ஆவது திருத்தச் சட்டம் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த சட்டத்தின் பிரகாரம் வடமாகாண ஆளுநருக்கும் வடமாகாண பிரதம செயலாளருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மைத் தகவல்கள், எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூலம் வெளிவரும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரினால் தனக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஸினால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான அம்பியுலன்ஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் தனது கருத்தினை வெளியிட்டார்.

வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதையே நான் விரும்புகின்றேன். இவ்வாறான வழக்கு எனக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது என்றும் வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .