2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாவகச்சேரி சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான், வி.விஜயவாசகன்


வடமாகாண முதலமைச்சர் பிரதேச சபை பொதுச்சுகாதாரர்கள் தொடர்பாக எடுத்த தீர்மானம் பற்றி அறிந்திராத சாவகச்சேரி நகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் இன்று (03) காலை 5.30 முதல் 8.30 மணி வரை பிரதேச சபைகளின் பொதுச் சுகாதாரர்களுக்கான பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரர்களை மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், புதன்கிழமை (02) அறிவித்துள்ளார் என நகரசபைத் தவிசாளரினால் விளக்கமளிக்கப்பட்டதினைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

யாழ். மாவட்டத்திலுள்ள நல்லூர், உடுவில், சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை காடர் (பணியாற்றுவதற்கான அனுமதி) இல்லாத காரணத்தினால் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றம் பெற்று பணியாற்றும்படி வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டிருந்தார்.

எனினும் அதற்கு யாழ். மாவட்டத்திலுள்ள சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்;டவர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இவர்களுடன் கைகோர்க்கும் வகையில் பிரதேச சபைகளின் சுகாதாரப் பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (02) அவசரக் கலந்துரையாடலினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர், பிரதேச சபைகளின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றும்படியும், பிரதேச சபைகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிற்கான ஆளணியினரை 6 மாத காலத்திற்குள் ஏற்படுத்தும் படியும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .