2025 ஜூன் 28, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கு கூட்டமைப்பு பயணம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் 9ஆம் திகதி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் தென்னாபிரிக்கா விலகிக்கொண்ட நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளமை தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யும் துரோகம் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .