2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி மின்கம்பத்துடன் மோதியது; இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உரும்பிராய்ச் சந்தியில்  முச்சக்கரவண்டியொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதால்  படுகாயமடைந்த இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதி சனிக்கிழமை (05) விபத்துக்குள்ளானது.

மேற்படி முச்சக்கரவண்டியில் பயணித்த கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கிருஸ்ணகுமாரி (வயது 75), விஸ்வலிங்கம் லதா (வயது 45) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து  தொடர்பில் விரிவான விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .