2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சடலத்தை படையதிகாரியிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இராணுவ வீரரின் சடலத்தினை பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் எழுதுமட்டுவாள் முகாம் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி சி.கீ.இளங்கீரன் திங்கட்கிழமை (19) உத்தரவிட்டார்.

மேற்படி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் பகுதியிருந்து எம்.எஸ்.நந்தவிஜயரூபன்ஹொடகே (50) என்ற இராணுவ வீரரின் சடலம் திங்கட்கிழமை(19)  கொடிகாமம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படடது.

இவர் குருநாகல் மாவட்டத்தின் நெதகம கிரியல்ல என்ற பகுதியினைச் சேர்ந்தவர் ஆவார்.

இவர் சடலமாக கிடப்பதாக பிறிதொரு சிப்பாய் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலே பொலிஸார் சடலத்தினை மீட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .