2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நெல்லியடி பேருந்து தரிப்பிட நிர்மாணிப்புக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ். நெல்லியடி பேருந்து தரிப்பிடம் நிர்மாணிப்பதற்காக 20 இலட்சம் ரூபாவை வடமாகாண சபையின் நிதியிலிருந்து வழங்குவதாக வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். 

2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட  வீதி அகலிப்புப் பணிக்காக நெல்லியடி பேருந்து தரிப்பிடம் இடிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு இதுவரையில் தரிப்பிடம் அமைக்கப்படவில்லை.

மேற்படி பேருந்து தரிப்பிடம் அமையவுள்ள பகுதியை புதன்கிழமை (21)  சென்று பார்வையிட்ட அமைச்சர், வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபை தவிசாளர் பொ.வியாகேசுவிடம்  20 இலட்சம் ரூபாவை வழங்குவதாகக்  கூறியுள்ளார்.

அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர்களான சு.சுகிர்தன், சிவயோகம், எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம், த.சித்தார்த்தன் ஆகியோரிடமிருந்து தலா 200,000 ரூபா படி பெறப்பட்டு, இந்நிதியிலிருந்தும் பேருந்து தரிப்பிட நிர்மாணத்திற்கான வேலைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதன்போது கரவெட்டி பிரதேச செயலர் ச.சிவசிறி,  பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர், வல்வெட்டித்துறை பிரதேச சபைத் தவிசாளர், வர்த்தக சங்கத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .