2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு கடூழியச் சிறை

Kogilavani   / 2014 ஜூன் 05 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.அரியாலைப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நபர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் அ.பிரேம்சங்கர் புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

அரியாலையைச் சேர்ந்த அல்பிரட் அசோக்குமார் என்ற நபரை அதேயிடத்தினைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஸ்ரீகுமார் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

தொடர்ந்து குறித்த நபர் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதுடன் இந்நபர் மீது யாழ்;.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குதல் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து மேற்படி வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தபோது, குறித்த நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை(4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பத்ததுடன், அபராதப் பணத்தினை செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .