2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இனந்தெரியாதோரின் தாக்குதலில் தம்பதி காயம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான் 

யாழ்., சாவகச்சேரி, கச்சாய்ப் பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் பொல்லுகள், கத்திகள் மற்றும் வாள்களுடன் நுழைந்த இனந்தெரியாத கும்பலொன்றின் தாக்குதலில், அவ்வீட்டிலிருந்த கணவனும் மனைவியும்; காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது குறித்த வீட்டிலிருந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலொன்றே மேற்படி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், அயலவர்கள் சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு வந்தவேளை அவர்கள் தப்பித்து ஓடிவிட்டதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .