2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர் ஒருவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேரில்  ஒருவர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (09)  அனுமதிக்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் 32 பேரையும் படகொன்று கவிழ்ந்ததால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் 04 பேருமாக மொத்தம் 36 மீனவர்களை  ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவரை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .