2025 ஜூலை 02, புதன்கிழமை

வரணி வடக்குப் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

யாழ்.வரணி வடக்குப் பகுதியில் 31 வயது நபர் ஒருவர் அவரது வீட்டின் அருகிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேசத்தைச்  சேர்ந்த குமாரசாமி கிருபாகரன் (31) என்ற நபரே அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இலுப்பை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக வியாழக்கிழமை (19) மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்த இவரை திடீரென காணவில்லையென உறவினர்கள் வியாழக்கிழமை மதியம் தேடிய வேளையிலே  குறித்த நபர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இவருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டிருந்ததாக அவரது தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நபருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .