2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கோவில் பசுவை திருடியவர்கள் விளக்கமறியலில்

Super User   / 2014 ஜூன் 20 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி தீத்தாங்குளம் பிள்ளையார் கோவில் முன்றலில் கட்டப்பட்டிருந்த கோவில் பசுவையும் அதன் கன்றினையும் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா இன்று வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர்கள் பசு மாட்டினை பிறிதொரு நபரிற்கு விற்பனை செய்துள்ளதுடன், அதன் கன்றினை இறைச்சியாக்கா வெட்டியுள்ளனர்.

பசு மாட்டினையும் அதன் கன்றினையும் காணவில்லையென ஆலயக் குருக்களினால்   வியாழக்கிழமை (19) அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

கோவில் முன்றலில் புதன்கிழமை (18) கட்டப்பட்டிருந்த மேற்படி பசுவும், கன்றும் வியாழக்கிழமை (19) காலை வந்து பார்த்த போது காணாமற்போயிருந்ததாக குருக்கள் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நால்வரும் அச்சுவேலி இடைக்காட்டுப் பகுதியில் வைத்து வியாழக்கிழமை (19) மாலை அச்சுவேலிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .