2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு

Kanagaraj   / 2014 ஜூன் 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    வி.தபேந்திரன்


தர்மபுரம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை தர்மபுரம் பகுதியினைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு தர்மபுரம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்றது.
இதற்கான அனுசரணையினை கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் வழங்கியிருந்தனர்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு அறிவூட்டும் கருத்துக்களை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.சுவேந்திரன், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இ.செந்தூரன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதன்போது, குழந்தைகளினை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்தல், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் எவ்வாறு எந்தக் காலப்பகுதிக்குள் ஏற்றப்படுதல் வேண்டும் மற்றும் தடுப்பூசிகள் ஏற்றப்படாமல் விட்டால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டப்பட்டது.

மேலும், குழந்தைகளின் நிறைகளைச் சரியாகப் பேணுதல், போசாக்குள்ள குழந்தைகளாக வளர்த்தல் போன்றவற்றிற்கு தாய்மாரினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், மற்றும் அதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .