2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சாலை அனுமதி பத்திர பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடபிராந்திய, இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அனுமதிபத்திரம் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைசார்ந்தோருக்கிடையில். யாழ். அலுவலகத்தில் சனிக்கிழமை (21) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு சாலைகளில் காணப்படும் அனுமதிபத்திரம் தொடர்பிலான பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தொழிற்சங்கங்கள் தமது கடமைகளை முழுமையான பங்களிப்புடனும் அர்ப்பணிப்புடனும் உணர்வுடனும் ஆற்ற வேண்டும் என்பதுடன் முன்மாதிரியாகவும் நியாயத்தன்மையுடனும், உண்மையுடனும் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும் என அமைச்சர் இதன் போது கூறினார்.

இதே வேளை, அரச ஊழியர்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் நலன்கள் பாதிக்காத வகையில் தமக்கான கடமைகளை செய்யும் போதுதான் அவர்களுடைய பணி முழுமை பெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால, ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பியின் காரைநகர் இணைப்பாளர் கண்ணன், வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .