2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நகைகளை திருடிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 22 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். அளவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 83 ¼ பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் அதேயிடத்தைச்  சேர்ந்த  18, 19, மற்றும் 20 வயதுடைய மூவரை சனிக்கிழமை (21) மாலை கைதுசெய்ததாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஐ.என்.எஸ்.கஸ்தூரியாராட்சி தெரிவித்தார்.

உறவினர் ஒருவரின் விசேட நிகழ்வில் (பூப்புனித நீராட்டுவிழா) கலந்துகொள்வதற்காக  இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு  வந்திருந்த குறித்த பெண்ணின் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளே திருடப்பட்டுள்ளன.

நகைகளை கைப்பையுடன்  வீட்டிலிருந்த அலுமாரியினுள் வைத்ததாகவும் வெள்ளிக்கிழமை (20) காலை கைப்பையை  எடுத்துப் பார்த்தபோது நகைகள் திருட்டு போயிருந்ததாகவும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்  குறித்த பெண் செய்த  முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

சந்தேக நபர்களிடம்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .