2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். நகரத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என யாழ். பண்ணை இராணுவ முகாம் பிரிகேடியர் வி.வி.டி.பி.அபயநாயக்க நேற்று சனிக்கிழமை (21) இரவு தெரிவித்தார்.

யாழ். உலமா சபைத் தலைவர் ஏ.என்.ஏ.அசீப், யாழ். முஸ்லீம் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் மற்றும் பண்ணை இராணுவ முகாம் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று பண்ணை இராணுவ முகாமில் நேற்று சனிக்கிழமை (21) இரவு 9 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லீம் தொழுகை அறை மீது கழிவொயில் வீச்சுத் தாக்குதல் மற்றும் எம்.ஓ வீதியிலுள்ள கமால் பள்ளிவாசல் ஐன்னல் கண்ணாடிகள் மீது தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களினால் முஸ்லீம்கள் தங்களுக்கு பாதுகாப்பில்லையென கருதுகின்றனர் என முஸ்லீம் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே அபயநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,

பள்ளிவாசல்களின் பாதுகாப்புக் கருதி இராணுவத்தினர் துவிச்சக்கரவண்டிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி நோன்பு ஆரம்பமாகும் வேளையில் முஸ்லீம் மக்கள் அச்சமில்லாமல் நோன்பினைக் கடைப்பிடிக்கும் வகையில் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .