2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வடமாகாண சபையினருக்கான வாகனங்கள் வழங்கப்பட்டன

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், சொர்ணகுமார் சொரூபன்


வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களுக்காக புதிதாக தலா 58 இலட்சம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று (05) வழங்கப்பட்டன.

மேற்படி வாகனங்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால்  அமைச்சுக்களின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டன.

இதில் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கான வாகனங்களும் மற்றும் சுகாதார அமைச்சின் பாவனைக்கான வாகனமுமே வழங்கப்பட்டன.

இருந்தும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோருடைய வாகனங்களை குறித்த நிறுவனம் இன்னமும் கையளிக்காத காரணத்தில் வழங்கப்படவில்லையெனவும், அது கிடைக்கப்பெற்றதும், உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .