2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கோழித் திருடனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூலை 06 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நெல்லியடி கிழக்குப் பகுதியில் கோழிகளைத் திருடமுயற்சித்த, குடத்தனையைச் சேர்ந்த 43 வயது நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், சனிக்கிழமை (05) உத்தரவிட்டதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) தெரிவித்தனர்.

குறித்த நபர் மற்றொரு வீட்டின் வளவுக்குள் சனிக்கிழமை (05) அதிகாலை நுழைந்து, கோழி திருடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ரோந்துப் பணியில் ஈடுபட்ட நெல்லியடிப் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து குறித்த நபரை நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையிலே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .