2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வளங்களை சரியாக பயன்படுத்தி இலக்கை அடையலாம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


எங்களுக்கு கிடைக்கின்ற வளங்களை சரியாக பயன்படுத்தும்போது, நாம் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைய முடியும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின்; மருதநகர்ப் பகுதியில் 10 விவசாயிகளால் 2½ ஏக்கரில் மேற்கொள்ளப்பட்;ட மறு வயல் சிறுதானிய அறுவடை விழா புதன்கிழமை (09) நடைபெற்றது.  இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட இந்த  நிலத்தில்; வர்க்க முன்மாதிரி துண்டப் பரிசோதனை என்ற  அடிப்படையில் மறு வயல்; செய்கையில் சிறுதானியங்களான நிலக்கடலை, கச்சான், பயறு, கௌப்பி உள்ளிட்டவை செய்கை பண்ணப்பட்டன.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கை பிரதான செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது. நெற்செய்கை காலம்; தவிர்ந்த ஏனைய காலத்தில்; இந்த நிலங்கள் தரிசு நிலங்களாக விடப்படுகின்றன.

இவ்வாறான மறு வயல் செய்கையின் மூலம் விவசாயிகள் பெரும் நன்மையடையும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதுபோன்ற  செய்கையை எல்லா இடங்களிலும் மேற்கொள்ள முடியாது. அதற்கென தெரிவுசெய்யப்பட்ட நிலப்பரப்புக்களில் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்ட  விவசாயிகளினுடைய முயற்சியால் இச்செய்கை வெற்றியளித்துள்ளது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், விவசாய திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்;.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .