2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயம்

Super User   / 2014 ஜூலை 09 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  யோ.வித்தியா,பொ.சோபிகா
இருவேறு விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (09) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பருத்தித்துறை வீதி முத்திரைச் சந்திப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் அருகிலுள்ள வாய்க்காலிற்குள் பாய்ந்ததில் கச்சேரி நல்லூர் வீதியினைச் சேர்ந்த ச.சந்திரகுமார் (37) என்பவர் படுகாயமடைந்தார்.

அதேவேளை, யாழ்.பெருமாள் கோவில் வீதியில் மோட்டார்  சைக்கிளில்  சென்ற யாழ்.மடத்தடியினைச் சேர்ந்த அன்ரன் பாலசூரியன் (41), திடீரென நாய் குறுக்கிட்டதினால்  நாயுடன் மோதுண்டு கீழே வீழ்ந்து படுகாயமடைந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .