2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விஞ்ஞானத்துறையில் மாணவர்கள் கல்வி கற்பது குறைவு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வடமாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் விஞ்ஞானத்துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் வீழ்ச்சி கண்டுவருவதாக வடமாகாண கல்வித் திணைக்களத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் நிறுவுனர் நினைவுதினமும் பரிசளிப்பு விழாவும் அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில்  புதன்கிழமை (09) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு  கூறினார்.

இங்கு  அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நிலையை மாற்றியமைத்து விஞ்ஞானத்துறையில் மாணவர்களை கற்பிக்க ஊக்கமளிக்க  வேண்டும் என்று வடமாகாண கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் எடுத்த முயற்சிகள் முழுமையாக வெற்றியளிக்கவில்லை. வெற்றியளிக்காமைக்கு பெற்றோர், மாணவர்களின் பூரண ஒத்துழைப்பு இல்லாமையே காரணமாக அமைந்துள்ளது.

விஞ்ஞானத்துறையில் கற்கும் மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக காணப்படுகின்றது. மூன்று பாடங்களில் சித்தி பெற்று ஏதோவொரு குறிப்பிட்ட துறையில் இரண்டு வருடங்கள் கல்வி கற்றாலே வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஏதோவொரு திறமை காணப்படும். அதனை நாம் இனங்கண்டு வளர்த்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த வகையில் தான் இன்று கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அருணோதயாக் கல்லூரி வீர, வீராங்கனைகள் தேசிய மட்டத்தில் பல விருதுகளைப் பெற்று முன்னிலையில் திகழ்வதுடன், கல்வியிலும் முன்னிலையில் காணப்படுகின்றனர்” என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .