2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு நிதயுதவி

Menaka Mookandi   / 2014 ஜூலை 10 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் மேம்பாட்டுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் வைத்து, இந்நிதியுதவிக்கான காசோலை இன்றைய தினம் (10) வழங்கி வைக்கப்பட்டது.
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழான சங்கானை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் அபிவிருத்திக்காக மேற்படி நிதி வழங்கப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான கல்வி, தொழில் வழிகாட்டல்களுக்கான கருத்தரங்கு, கலை, பண்பாடு மற்றும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக இந்நிதி செலவிடப்படவுள்ளது.

இதற்கான காசோலையினை சங்கானை பிரதேசத்திற்கான இளைஞர் சேவை அதிகாரி மதன்ராஜ், அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .