2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நயினாதீவுக்கு விசேட பேருந்து சேவை

Super User   / 2014 ஜூலை 10 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, யோ.வித்தியா

யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (10) முதல் இலங்கை போக்குவரத்து சபையின் விசேட பேருந்து சேவை நடத்தப்படுகின்றன.

நாளை வெள்ளிக்கிழமை (11) நடைபெற உள்ள வருடாந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டே  நடத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெரிவித்தார்.

இதற்காக  20 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது பேருந்து சேவை, நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு வரும் இறுதிப் படகு சேவை வரையில் இடம்பெறுமெனத் தெரிவித்தார்.

மேலும், நயினாதீவு செல்லும் பக்தர்களுக்;காக, குறிகட்டுவான் இறங்கு துறைப்பகுதியில் தாகசாந்தி நிலையம் ஒன்றும் இ.போ.சவின் யாழ். சாலையினால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .