2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒருவர் வெட்டிக்கொலை : இதுவரை நால்வருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூலை 10 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் வைத்து இளைஞர் ஒருவர் ஜூன் மாதம் 5ஆம் திகதி இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், தொடர்புபட்ட நான்காவது நபரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்நசேகரம், வியாழக்கிழமை (10) உத்தரவிட்டார்.

மேற்படி கொலைச் சம்பவத்துடன், தொடர்புபட்டவர்கள் என ஏற்கனவே மீசாலையினைச் சேர்ந்த மூவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை (08) சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதவான் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதனுடன் தொடர்புபட்ட நான்காவது நபரான உதயகுமார் வாகீசன் (வயது 23) என்பவர் இன்று வியாழக்கிழமை(10) காலை மீசாலையில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் அல்லாரையைச் சேர்ந்த என்.அன்பழகன் (வயது 26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மீசாலையில் ஆலயத்திருவிழாவொன்றில் கடந்த சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின் எதிரொலியாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .