2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ற.றஜீவன் 


யாழ். வல்வைச் சந்தியில் தனியார் சிற்றூர்தியும் முச்சக்கரவண்டியும் இன்று (11) நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டிச் சாரதியான அச்சுவேலி இராஜகிராமத்தினைச் சேர்ந்த மார்க்கண்டு தரன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து சென்ற முச்சக்கரவண்டியும் உடுப்பிட்டியிலிருந்து சென்ற சிற்றூர்தியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .