2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதிலுக்கு மேலால் எறிந்த குப்பையால் காயமடைந்த சிறுவன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மதிலுக்கு மேலாக எறியப்பட்ட குப்பை வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவனொருவரின் தலையைப் பதம்பார்த்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், ஊரெழு வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தால் காயமடைந்த 10 வயது சிறுவன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குப்பைப் பைக்குள் இருந்த பீங்கானொன்று, சிறுவனின் தலையில் பட்டே, அச்சிறுவன் காயமடைந்துள்ளான் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .