2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழில் போராட்டம்; தமிழ் கட்சிகள் ஆதரவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, யோ.வித்தியா


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (15) நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலான 3 கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க இணைப்பாளர் என்.இன்பம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தல், காணிச் சுவீகரிப்பினைத் தடுத்தல் மற்றும் காணாமற்போனாரை விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கியதாக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (14) யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், மாக்சிச லெனினிச புதிய ஜனநாயகக் கட்சியின் செயலாளர் செல்வம் கதிர்காமநாதன், தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .