2025 ஜூலை 05, சனிக்கிழமை

வட மாகாண ஆளுனருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து

Kanagaraj   / 2014 ஜூலை 14 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டும் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பத்ரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அவரது கொழும்பு அலுவலகத்தில் நேற்றைய தினம் (13) சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடந்த காலங்களில் எமது மக்களுக்கான தங்களது சேவை எவ்வாறு சிறப்பாக இடம்பெற்றிருந்ததோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடரவேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வகையில் என்னோடு இணைந்து பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். அதற்காக எமது மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றங்களுக்கு தாங்கள் ஆற்றிவந்த பங்கு பணிகள் மகத்தானவை.

எனவே, எதிர்காலங்களிலும் மஹிந்த சிந்தனைக்கு அமைய அரசின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கும் அதேவேளை, உங்கள் சேவை மூலம் வடமாகாணம் சகல துறைகளிலும் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் எனத் தாம் வாழ்த்துவதாகவும் அமைச்சர்; இதன்போது தெரிவித்தார்.
இம்மாதம் 11ஆம் திகதியுடன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின்  பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவரது சேவைக்காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நீடிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .