2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நிதி நியதிச்சட்ட விவாதம் அடுத்த அமர்வில்; வட மாகாண அவைத் தலைவர்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா, நா.நவரத்தினராசா

வடமாகாண சபையின் நிதி நியதிச் சட்டம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறியின் பரிந்துரைகள் ஒரிரு தினங்களில் கிடைக்கப்பெறும் எனவும் அதன் பிறகு இச்சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாத, விவாதத்துக்கு விடப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவைத் தலைவர், 'வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச் சட்டம் வடமாகாண ஆளுநரிடமும் திறைசேரியிடமும் பரீசிலனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசீலனைகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும்.

அதன்பின்னர் அவை, எதிர்வரும் வடமாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணசபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X