2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிவில் ஒருவரை ஆளுநராக நியமிக்கவும்: கஜதீபன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

'பெருன்பான்மையின, பௌத்த மதத்தினையுடைய சிவில் ஒருவரை, வட மாகாண ஆளுநராக நியமியுங்கள்' என்று வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் இன்று செவ்வாய்க்கிழமை (15) கோரிக்கை விடுத்தார்.

இன்று இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, வடமாகாண ஆளுநராக ஜி.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே கஜதீபன் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது இந்த ஆகக்குறைந்த பட்ச கோரிக்கையை நிறைவேற்ற முடியாத ஐனாதிபதி, எமது தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்?' என்று கேள்வி எழுப்பினார்.

'சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக நியமித்தமையானது, எம்மை இன்னும் வெறுப்பூட்டும் செயற்பாடாகவே அமைகிறது. ஐனாதிபதி திட்டமிட்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நாம் வடமாகாண சபைக்கு வந்திருக்கிறோம். எமது நல்லிணக்கத்தை பின்பற்ற விரும்புவர்கள் எமது கரங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். நாம் யதார்த்தத்திற்கு புறம்பாக செயற்படவில்லை. நியாயமான கோரிக்கைகளையே முன்வைக்கிறோம்' என்று கஜதீபன் மேலும் கூறினார்.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .