2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யார் ஆட்சிக்கு வந்தாலும் அடக்குமுறைகள் தொடரும்: கஜேந்திரன்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடரத்தான் போகின்றன. ஆகவே தமிழ் மக்களை பாதுகாக்க கூடிய புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறவிருந்த போராட்டம் கண்டனக் கூட்டமாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள பௌத்த பேரினவாத அரசு தாமாக முன்வந்து தமிழ் மக்களுக்கு தீர்வினை தரப்போவதில்லை. இந்த பௌத்த பேரினவாத அரசின் மனநிலையிலும் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

தமிழ் மக்கள்  போராடியே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போராட்டத்திற்கு எம்நட்பு சக்திகளையும் சிங்கள முற்போக்குவாதிகளையும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி தமிழ்மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தை தமிழ் மக்கள் முன்னெடுக்கவிடின் தமிழ்மக்களது மொழி, கலாசாரம் என்பன அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் இந்த நாட்டிலே இல்லாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள்.

தமிழ் மக்களது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் மக்களை, தமிழ் மக்களே ஆட்சி செய்கின்ற சூழல் உருவானால் தான் இந்த நாட்டிலே பாதுகாப்பாக வாழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .