2025 ஜூலை 05, சனிக்கிழமை

தீவக மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். தீவக மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு கூடிய விரைவிலே சரியான தீர்வு வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று வியாழக்கிழமை (17) தெரிவித்தனர்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

'காடையர்களால் ஆளப்பட்ட இந்த மண்ணுக்கு இன்று தான் மனிதர்கள் வந்துள்ளார்கள். இதுவரை காலமும் தீவகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள், தீவக மக்களுக்கான குடிநீர் வசதிகளை செய்து கொடுக்கவும் இல்லை, வீதிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் இல்லை.

வடமாகாண சபை ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்ததன் பின்னர் தான் இன்றைய காலகட்டத்தில் வடமாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரிலே தற்போது வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடமாகாண சபை என்ன செய்கின்றது என கேட்பவர்களுக்கு இன்று வடமாகாண முதலமைச்சரினால் மண்டைதீவு மண்ணிலே திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையினையும் புனரமைக்கபட்டு வரும் இந்த வீதிகளையும் காண்பிக்க வேண்டும்.

குடிநீர்ப் பிரச்சினை தனியே யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல வடமாகாணம் முழுவதும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தீவகத்திலே குடிநீர் பிரச்சினை பாரிய அளவில் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .