2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குடிநீரினை பரிசோதிக்குமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி, உமையாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு கரைச்சிப் பிரதேச சபையினால்; விநியோகிக்கப்படும் நீர் குடிப்பதற்கு உகந்த சுத்தமான நீரா என்பதை பரிசோதிக்குமாறு கண்டாவளைப் பிரதேச வைத்தியதிகாரிக்கு கண்டாவளைப்பிரதேச செயலர் ரி.முகுந்தன் நேற்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார்.

இம்மக்களுக்கான குடிநீரினை கரைச்சிப் பிரதேச சபை விநியோகம் செய்து வருகின்றது. இந்த குடிநீர் தட்டுவன்கொட்டிக் கிராமத்திற்குச் சொந்தமாக இயக்கச்சிப் பகுதியிலுள்ள 10 ஏக்கர் காணியிலுள்ள கிணற்றிலிருந்து எடுத்துப் பிரதேச சபை முன்னர் விநியோகித்து வந்தது.

ஆனால், தற்போது குடிநீர் இயக்கச்சிக் கிணற்றிலிருந்து வழங்கப்படாமல் வேறு ஒரு இடத்திலிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பிரதேச செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

மேலும், பிரதேச சபையினால் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்தமான குடிநீர் இல்லை என்றும், இதனால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் முறையிட்டிருந்தனர்.

இதனடிப்படையிலே, குடிநீரினைப் பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பிரதேச செயலர் சுகாதார வைத்தியதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .