2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'சர்வதேசத்தின் மூலம் ஆயதம் தாங்கியவர்களை வெளியேற்ற முடியும்'

Menaka Mookandi   / 2014 ஜூலை 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே வடக்கில் இருந்து ஆயுதம் தாங்கியவர்களை வெளியேற்ற முடியும் என  வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் கடற்படை சிப்பாய் ஒருவரால் 11 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையினை எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை (18) காரைநகர் பிரதேச செயலகம் முன்றலில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தான் புலிகள் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் சிங்கள பேரினவாதிகள் தமிழ்மக்களை அடித்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு அரசிடம் கோரிக்கை விடுவதன் மூலமோ அல்லது மகஜர் கையளிப்பதன் மூலமோ எமக்கு பயன் கிடைக்கப்போவதில்லை. 

எங்களுடன் போராடக்கூடிய நட்பு சக்திகளை அணிதிரட்டி போராடியே இந்த மண்ணிலே உள்ள ஆயுதம் தாங்கியவர்களை வெளியேற்ற வேண்டும்.

எமது போராட்டங்கள் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்து சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தின் ஊடாகவே எமது மண்ணில் இருந்து ஆயுதம் தங்கியவர்களை வெளியேற்ற முடியும்.

நாம் இவ்வாறு அவர்களை வெளியேற்றுவது குறித்து போராட்டம் நடத்தி கொண்டு இருக்கையில் அரசுடன் ஒட்டியுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்ற காரைநகர் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் வீரமுத்து கண்ணன் என்பவர், நடந்தது நடந்து முடிந்துவிட்டது இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டுவிடுங்கள், அவர்களிடம் (கடற்படை) இருந்து பணம் பெற்று தருவதாக கூறியுள்ளார். இவ்வாறனவர்களை மக்கள் இனங்கான வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .