2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி எவரையும் அடையாளங் காட்டவில்லை

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்


யாழ். காரைநகர் ஊரிப் பகுதியில் 11 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 7 கடற்படை வீரர்களை அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்திய போது சிறுமி அதில் எவரையும் அடையாளங் காட்டவில்லை.

மேற்படி வழக்கு நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தும்படி உத்தரவிட்டார்.

அதற்கமைய நேற்று (18) மாலை 7 சந்தேகநபர்களுடன் ஏலாரை கடற்படை முகாமினைச் சேர்ந்த 49 கடற்படை வீரர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சிறுமி அதில் எவரையும் அடையாளங் காட்டவில்லை.  இதனையடுத்து, மேற்படி வழக்கினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான், மேற்படி 7 சந்தேக நபர்களையும் அத்தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .