2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்தில் தந்தையும் மகளும் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். மீசாலை ஐயா கடைப் பகுதியில் மோட்டார் சைக்கிளோன்று நிலைதடுமாறி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த வல்லிபுரம் மகாலிங்கம் (வயது 61), அவரது மகள் மகாலிங்கம் கீர்த்தனா (வயது  25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

மேற்படி இருவரும் பளையிலிருந்து திருநெல்வேலியிலுள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, கீர்த்தனா அணிந்திருந்த சல்வாரின் ஷேhல் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்கிக்கொண்டதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த இருவரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .