2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 19 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் ஜூன் மாதம் 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 52 வயதுடைய சிவபாதசுந்தரம் நிர்மலா என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு, தனக்குத் தானே தீ மூட்டிய நிலையில் முதலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று (18) உயிரிழந்த  இவருடைய மரணம் தொடர்பான விசாரணைகளை, யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டதன் பின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .