2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இராஜதந்திர ரீதியில் அரசியல் தீர்வை பெறவேண்டும்: சுமந்திரன்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


உலகில் 22 நாடுகள், இன்னொரு நாட்டிலிருந்து பிரிந்து புதிதாக தோன்றியுள்ளன. இவை அனைத்தும் போரினால் அல்லாது இராஜதந்திர ரீதியிலேயே தோன்றியுள்ளனே. எனவே,  அரசியல் தீர்வைப் பெற இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தென்மராட்சி மக்களுடனான கலந்துரையாடல் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (19) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச விசாரணைக்கான ஏதுநிலை காணப்படுகின்றது. அத்துடன், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் மூவர், எமது வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா.வினால் இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுவதுடன், எதிர்;க்கட்சி உறுப்பினர்களுக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுகின்றன. இதனால், அபிவிருத்தியை  நிறைவாகச் செய்ய முடியவில்லை.

பிரதேச வளங்களைக் கொண்டு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவை விரைவில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது' என்றார்.

இந்தக் கலந்துரையாடலின்போது மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .