2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டின் போது காட்டப்பட்ட இனத்துவேசம் கண்டிக்கத்தக்கது : இம்மானுவல்

Super User   / 2014 ஜூலை 20 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துகின்ற விளையாட்டு நிகழ்வொன்றில் எமது யாழ்ப்பாண வீரர்கள் தாக்கப்பட்டமையானது எம்மீது பெருன்பான்மையினத்தவர்களுக்கு இருக்கின்ற துவேசம் வெளிப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினரும், வடமாகாண விளையாட்டுத்துறை பொறுப்பாளருமான இம்மானுவல் ஆனோல்ட் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (19) கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றது.

இதில் காலிறுதிப் போட்டியில் யாழ்;. மாவட்ட அணி, அம்பாந்தோட்டை அணியினை வென்றது.
தொடர்ந்து, யாழ். மாவட்ட அணி, அரையிறுதியாட்டத்தில் கம்பஹா மாவட்ட அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்திற்கு வெளியில் நின்றிருந்த அம்பாந்தோட்டை அணி வீரர்கள், யாழ். வீரர்கள் மீது போத்தல்கள், கற்கலாள் தாக்குதல் மேற்கொண்டதுடன், எல்லைக்கோட்டின் அருகில் நின்றிருந்த வீரர் ஒருவரை இழுத்து கீழே வீழ்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடுவரிடம் முறையிட்ட போதும், அவர் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனையடுத்து, யாழ்ப்பாண வீரர்கள் மைதானத்தினை விட்டு வெளியேறினார்கள்.
இதன்போதும், அம்பாந்தோட்டை வீரர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாண வீரர்களை நோக்கித் தாக்குதல் மேற்கொண்டு 'யாழ்ப்பாண நாய்களே ஒடுங்கள்' என்று கத்தியுள்ளனர்.

இது தொடர்பில், வடமாகாண விளையாட்டுப் பொறுப்பாளர் ஆனோல்ட்டிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கன்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

விளையாட்டு என்பது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் ஒன்று. இதன்போது, இவ்வாறான அநாகரீகமான செயற்பாட்டில் ஈடுபட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசியல் இல்லாத விளையாட்டுத்துறையில், பிரதேசவாதம் மற்றும் இனவாதம் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் உண்மையில் விளையாட்டுக்களில் பங்குபற்றுவதற்கு தகுதியற்றவர்கள்.

இந்தச் சம்பவத்தினையடுத்து இனிவருங்காலங்களில் எமது வடமாகாண வீரர்கள் தெற்கில் போட்டிகளில் பங்குபற்றுதற்கு அச்சப்படுவார்கள்.

நாங்கள் 60 வருடங்கலாக இந்த இனவாதம், மற்றும் ஒதுக்கப்படும் செயற்பாடுகளுக்காகவே அரசியல் ரீதியில் போராடி வருகின்றோம்.

இந்த சம்பவம் மூலம் இலங்கையில் இடம்பெறுகின்ற இனவாத பிரதேசவாத விடயங்கள் சர்வதேச சமூகத்திற்கு புலப்படும்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஏற்படுவதினைப் பாதிக்கும் இந்தச் சம்பவத்தினை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .