2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுக் குற்றச்சாட்டு; இரு சிறுவர்களை நன்னடத்தை பாடசாலையில் சேர்க்க உத்தரவு

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., துன்னாலைப் பகுதியிலுள்ள ஐயர் வீட்டில் பித்தளைப் பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை வைத்திருக்கும்படி யாழ். குருநகர் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டதாக நெல்லியடிப் பொலிஸார் திங்கட்கிழமை (21) தெரிவித்தனர்.

அத்துடன், 31ஆம் திகதி மேற்படி இரு சிறுவர்களின் பெற்றோரினையும் மன்றில் ஆஜராகும்படி நீதவான் உத்தரவிட்டார்.

இது பற்றி தெரியவருவதாவது,

துன்னாலைப் பகுதியிலுள்ள ஐயர் வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (18) 20 ஆயிரம் ரூபா பெறுமதியிலான பித்தளைப் பொருட்கள் திருட்டுப் போயிருந்தது. இது தொடர்பில், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், ஐயர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அதற்கிணங்க, விசாரணைகளை மேற்கொண்ட நெல்லியடிப் பொலிஸார் அதேயிடத்தினைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களைக் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்த போது, திருடிய பித்தளைப் பொருட்களை நெல்லியடியிலுள்ள இரும்பு விற்பனை நிலையத்தில் 5 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ததை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மேற்படி இரும்புக் கடையிலிருந்து பித்தளைப் பொருட்களை மீட்ட பொலிஸார், இரண்டு சிறுவர்களையும், யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .