2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பச்சை மிளகாய்த் திருடன் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ்., கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைப் பிடிங்கி அவற்றை சாவகச்சேரி பொதுச்சந்தையில் மலிவு விலையில் விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (21) கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கெற்பேலி பகுதியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு வேளைகளில் திருட்டுப் போவதாக குறித்த தோட்டங்களின் உரிமையாளர்களான விவசாயிகள், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

சந்தையில் 400 ரூபா தொடக்கம் 600 ரூபா வரையில் பச்சை மிளகாய் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற போதும், ஒரு நபர் மட்டும் 150 ரூபாவிற்கு பச்சை மிளகாய்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அவதானித்த விவசாயிகள் மேற்படி சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (21) சிவில் உடையுடன் சந்தையில் மறைந்திருந்த கொடிகாமம் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பொலிஸார், மேற்படி நபர் பச்சை மிளகாய் வியாபாரம் செய்யும் போது கைது செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கெற்பேலியிலுள்ள தோட்டங்களில் பச்சை மிளகாய்களைத் திருடி குறைந்த விலையில் அதனை விற்றுவந்ததினை ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சந்தேகநபரை நாளை புதன்கிழமை (23) சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .