2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

குழைபோட்டு மீன்பிடி : நால்வருக்குத் தண்டம்

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை முனைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையான குழை போட்டு மீன்பிடியில் ஈடுபட்ட ஐவரில் நால்வருக்குத் தலா 1000 ரூபா தண்டம் விதித்ததுடன், ஐந்தாவது நபரை 50000 ரூபா சரீரப் பிணையில் செல்லுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன்  செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

இதேவேளை, இவ் வழக்கினை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதவான், தப்பியோடிய இருவருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்ததுடன் 3 படகுகளையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படியும் நீதவான் பொலிஸாரிற்கு கூறினார். 

முனைக் கடற்பரப்பில் குழை போட்டு கணவாய் பிடிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர் என, முனை மீனவச் சங்கத்தினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினரும் இணைந்து முனைக்  கடல்பகுதிக்கு திங்கட்கிழமை(21) சென்றனர். 

இதன்போது, குழை போட்டு மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேரைக் கைதுசெய்ய முயன்றவேளை அவர்களில் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து, மிகுதி 5 பேரையும் கைதுசெய்து பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .