2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காட்டுமரக் குற்றிகளைக் கடத்தியவர் கைது

Kogilavani   / 2014 ஜூலை 29 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


சிறிய ரக வாகனம் ஒன்றில் வன்னியிலிருந்து கோப்பாய்ப் பகுதிக்கு காட்டு மரக்குற்றிகளைக் கடத்தி வந்த வாகனச் சாரதியொருவரை சனிக்கிழமை (26) கைதுசெய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

கூட்டெருக்களுக்கு நடுவில் மறைத்து வைத்தே இவர் மரக்குற்றிகளை கடத்தி வந்துள்ளார்.

கோப்பாய்ப் பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் கூட்டெருக்களை கொட்டிவிட்டு மரக்குற்றிகளைக் கொண்டு செல்ல எத்தணித்த தருணத்திலே பொலிஸ் இவரை கைதுசெய்துள்ளனர். 

மேற்படி சந்தேகநபர் ஏற்கனவே இவ்வாறு மூன்று தடவைகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  
அத்துடன், பிடிக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளரைக் கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .