2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்
 

யாழ்., அல்வாய் வடக்குப் பகுதியினைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 40 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையினை சந்தேகத்தின் பேரில் நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

சிறுமியில் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் மேற்படி சந்தேகநபர் சிறுமியின் குடும்பத்துடன் சிநேகமாகப் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி சிறுமியினை திங்கட்கிழமை (28) பாடசாலைக்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்வதாக கூறி, சந்தேகநபர் வியாபாரமூலைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் பொலிஸாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, சிறுமியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றதும் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேற்படி சந்தேகநபரை யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .