2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகம் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 29 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளை அலுவலகம், தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் இன்று செவ்வாய்க்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்கள்.

தந்தை செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரின் திருவுருவப் படங்களிற்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் அதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .