2025 ஜூலை 09, புதன்கிழமை

தெல்லிப்பளை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மாற்றம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 30 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரிவின் தலைவர் சோமசுந்தரம் செல்வரத்தினம் தனது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வலி.வடக்கு பிரிவின் கணக்காளர் பகுதி, கடந்த 11 மாதங்களாக மாதாந்தக் கணக்கறிக்கையினை சமர்ப்பிக்கவில்லை என்றும், அது தொடர்பாக யாழ்ப்பாணச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைக் கிளையிடம் முறையிட்ட போதும், அது தொடர்பில் கிளை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறியே அவர் தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, செல்வரத்தினம் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் வலி.வடக்கு கிளைக்கு புதிய தலைவராக செல்லையா செல்வரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .