2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இணக்கப்பாட்டின் மூலம் தொழில் செய்யவும்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன் 

'கிளிநொச்சி கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கீழுள்ள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியினை, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்' என கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார்.

மேற்படி பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடல்ப்பகுதி இல்லாமல் மீன்பிடித் தொழிலினைக் கைவிட்ட நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், கரைச்சிப் பிரதேச ஒருங்கிணைப்புக் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

'கிளிநொச்சி கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச எல்லைப் பரப்பிற்குட்பட்ட ஆழ்கடல் தொழிலாளர்கள், தொழில் செய்வதற்குரிய கடல்தொழிற்பாடுகள் இன்மையால் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
கிளிநொச்சி கரைச்சி வடக்கு கடற்றொழில் சமாசத்திற்கு உட்பட்ட மீனவர்கள், கடந்த காலங்களில் சுண்டிக்குளம் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரையான கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்;த பேய்ப்பாறைப்பிட்டி கடற்கரையோரப் பகுதியானது முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய பகுதியாகவும் சுண்டிக்குளம் பகுதி யாழ்.வடமராட்சி கடற்கரையோரப் பகுதியாகவும் காணப்படுகின்றது.

இதனால் மேற்படி இருமாவட்ட கடற்தொழிலாளர்களும் தொழில் அனுமதி பெற்று, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதினாலும், கடலில் தொழில் செய்வதற்கான உரித்துக்கள் அவர்களுக்கே இருப்பதினாலும், கரைச்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

எனவே குறித்த கடற்தொழிலாளர்கள் தாங்கள் கடற்றொழில் தவிர வேறு தொழில் தெரியாத நிலையில் இருப்பதனால் தமக்குரிய கடற்றொழில்;பாடுகளை பெற்றுதர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்'
இந்நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, முருகேசு சந்திரகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .