2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆலயங்களில் திருடிய சந்தேகநபர் இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் பொருட்களைத் திருடி அதனைக் கொழும்பில் விற்பனை செய்து வந்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

இது பற்றி சுன்னாகம் பொலிஸார் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாணம், சுன்னாகம், ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை, மானிப்பாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய பொலிஸ் நிலையங்களின் கீழுள்ள ஆலயங்களில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்;டலில் விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

விசாரணைகளில் தெல்லிப்பளையினைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திருடிய பொருட்களை கொழும்பில் விற்பனை செய்வதற்கு ஒருவர் உதவி புரிவதாகத் தெரிவித்தார்.

அந்தத் தகவலின் அடிப்படையில், கொழும்பு மருதானையினைச் சேர்ந்த சந்தேகநபரும் அன்றைய தினம் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

கொழும்புச் சந்தேகநபரிடமிருந்து 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆலயப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து மேற்படி இரு சந்தேகநபர்களையும் வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளை நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் என பொலிஸார் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .