2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மோட்டார் குண்டுகள் நான்கு மீட்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-   ற.றஜீவன், செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர் வாதாரவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூடக் குழிக்குள் இருந்து 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் நான்கு ஞாயிற்றுக்கிழமை (10) காலை மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

வீடொன்றின் மலசலகூடக் குழியினை, வீட்டு உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை (10) துப்பரவு செய்தவேளையில் குண்டுகள் இருப்பது கண்டு, அது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தார்.

இதனையடுத்து, இராணுவத்தினருடன் அங்கு சென்று, மேற்படி 4 குண்டுகளையும் மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .