2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


டெஸ்லிங் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாய்பேசாத மற்றும் காதுகேட்காத மாற்றுத்திறனாளிகளுக்கான 'திறமைகளை வெளிக்கொணரல்' என்ற தொனிப்பொருளிலான செயலமர்வொன்று நிறுவனத்தின் உடுவில் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.

வணபிதா எஸ்.எஸ்.ஞானராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதான வளவாளராக கிளிநொச்சி மாவட்டச் செயலக சமூகசேவை உத்தியோகத்தர் வே.தபேந்திரன் கலந்துகொண்டார்.

இதன்போது, வாய்பேசாத மற்றும் காதுகேட்காத மாற்றுத் திறனாளிகளுக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலுள்ள வாய்ப்புக்கள் பற்றியும், அதற்காக அவர்கள் எவ்வகையில் தங்கள் திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூறப்பட்டது.

மேலும், நவீன உலகில் மாற்றுத்திறனாளிகளுக்குள்ள சவால்கள் தொடர்பாகவும், அத்தகைய சவால்களை எவ்வாறு வெற்றிகொண்டு சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களை முன்னிலைப்படுத்த முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .